Monday, May 22, 2017

12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையில் மாற்றம் - 200 மதிப்பெண்களுக்கு பதில் 100 மதிப்பெண்களாக குறைப்பு - பள்ளிக்கல்வி துறை அதிரடி






12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையில் மாற்றம் - 200 மதிப்பெண்களுக்கு பதில் 100 மதிப்பெண்களாக குறைப்பு - பள்ளிக்கல்வி துறை அதிரடி

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பல மாற்றங்களை கொண்டு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை, பிளஸ் 2 பாட திட்டத்திலும் மாற்றம் கொண்டு வர உள்ளது. .

இதன்படி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பாடவாரியான மொத்த மதிப்பெண் 200 லிருந்து 100 ஆக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 12-ம் வகுப்பு பாட வாரியாக மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2.30 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது

Popular Feed

Recent Story

Featured News