Monday, May 22, 2017

ஓடிவிடுங்கள் - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்


பூமியை விட்டு தப்பித்து ஓடிவிடுங்கள் - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்


மனித இனம் தன்னை காத்துக் கொள்ள பூமியை விட்டு வெளியேற வேண்டும் என்று சர்வதேச அளவில் பிரபலமான வானியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எச்சரித்துள்ளார். 

பருவநிலை மாற்றம், விண்கல் தாக்குதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்றவற்றின் காரணமாக மனித இனம் முற்றிலுமாக அழியும் அபாயம் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் நாளைய உலகம் என்கிற பிபிசி தொடரின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட புதிய பூமி பயணம் என்ற ஆவணப்படத்தில் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 



இந்த ஆவணப்படத்தில் தனது மாணவன் கிரிஸ்டோப் ஃகால்பார்டுடன் இணைந்து பூமி அல்லாத விண்வெளியில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, பிரிட்டன் வாழ் மக்களின் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு எது என்ற கேள்வியை எழுப்பி, அவர்களை வாக்களிக்கச் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 



நேரம் விரைவாகக் கடந்து கொண்டிருப்பதாகவும், மனித இனம் துரிதமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டீபன் ஹாக்கின்ஸ், மனித இனத்தின் மூர்க்கமான உள்ளுணர்வுகள், அதீதமான வேகத்தில் பயணிக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, நுண்ணுயிர்கள் கொண்டு நடத்தப்படும் பயோ வார் போன்றவையும், மனித இனத்தை அழிக்கும் பணிகளை செவ்வனே செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.  

Popular Feed

Recent Story

Featured News