Friday, May 26, 2017

பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திலிருந்து முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதல் தொடர்பான அறிவுரை சார்பாக - இயக்குநரின் செயல்முறைகள்.

முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு*
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பதவி உயர்வு பட்டியலில் *தமிழ் மற்றும் கணித பாடத்திற்கு மும்மடங்கும், ஏனைய பாடங்களுக்கு இரண்டு மடங்கும் பதவி உயர்வு அளிக்கக் கூடிய எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.


ஏனெனில், சென்ற ஆண்டில் பதவி உயர்வு கலந்தாய்வின்போது பெரும்பாலானவர்கள் பதவி உயர்வை தற்காலிகமாக உரிமை விடல் செய்தனர் என்ற அடிப்படையில் தற்போது கூடுதலாக கலந்தாய்விற்கு அழைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது மூத்தோர் உரிமைவிடல் செய்யும்போது, இளையோர் அவ்வாய்ப்பினை பெறலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் உத்தேசமாக அழைக்கப்படுகின்றது என்ற விவரம் *முதுகலையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது*

*கலந்தாய்வு அட்டவணை*
  1. தமிழ் வரிசை எண் 1 முதல் 150 வரை 
  2. ஆங்கிலம் (ஓரே பாடம்) ஆங்கிலம் (வெவ்வேறு பாடம்) வரிசை எண் 1 முதல் 75 வரை வரிசை எண் 1 முதல் 75 வரை 
  3. கணிதம் வரிசை எண் 1 முதல் 121 வரை 
  4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 100 வரை 
  5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 100 வரை 
  6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 100 வரை 
  7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 100 வரை 
  8. பொருளியல் வரிசை எண் 1 முதல் 100 வரை 
  9. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 100 வரை 
  10. புவியியல் வரிசை எண் 1 முதல் 10 வரை 
  11. உடற்கல்வி இயக்குநர் நிலை-1 வரிசை எண் 1 முதல் 14 வரை 
  12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 10 வரை 
  13. இந்திய பண்பாடு எண் 1 மட்டும்





Popular Feed

Recent Story

Featured News