2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்.. - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 20, 2017

2017ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு ஜூன் 28ந் தேதி ஆரம்பம்..

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு மார்ச் 2017 பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள் மற்றும் வருகை புரியாதவர்களுக்கு வருகிற 28.06.2017 அன்று தொடங்கி 06.07.2017 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2017 பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக் கால அட்டவணை விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 28ந் தேதி - பகுதி I - தமிழ் முதல் தாள்
ஜூன் 29ந் தேதி - பகுதி I - தமிழ் 2வது தாள்
ஜூன் 30ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் முதல் தாள்
ஜூலை 1ந் தேதி - பகுதி II - ஆங்கிலம் 2வது தாள்
ஜூலை 3ந் தேதி - பகுதி III - கணிதம்
ஜூலை 4ந் தேதி - பகுதி III - அறிவியல்
ஜூலை 5ந் தேதி - பகுதி III - சமூக அறிவியல்
ஜூலை 6ந் தேதி - பகுதி IV - விருப்ப மொழிப் பாடம்

Post Top Ad