Thursday, June 22, 2017

பிஎட் பட்டப்படிப்பு விண்ணப்ப விநியோகம் ஜூன் 21 இன்று முதல் ஆரம்பமானது.

பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூன் 21 இன்று முதல் 30ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டபடிப்பை முடித்துவிட்டு அடுத்து பிஎட் படித்து ஆசிரியராகி அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ வேண்டும் என எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காகவே வந்து விட்டது பிஎட் அட்மிஷன்
தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு மொத்தம் 1,707 இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்கள் கிடைக்குமிடங்கள்
பிஎட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள், சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்த நாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி.
கல்வியியல் கல்லூரி, திரு நெல்வேலி பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 இடங்களில் ஜூன் 21ந் தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. ஜூன் 30ந் தேதி மாலை 3 மணி வரை பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பிஎட் விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 500/-, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் கீழ் உள்ள முகவரியை சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,
தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018,
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி),
காமராஜர் சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-5

Popular Feed

Recent Story

Featured News