Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 3, 2017

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்” – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் நாடே திரும்பிப்பார்க்கும் அறிவிப்புகளை ஜூன் 6 ம் தேதி வெளியிட போகிறோம்” – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

பள்ளிக் கல்வித் துறையில் நாடே திரும்பிபார்க்கும் வகையில் 41 அறிவிப்புகளை முதலைமைச்சரிடம் அனுமதி பெற்று வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 எடப்பாடி பழனிச்சாமி அரசு பதவியேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கபட்டார்.

 இதையடுத்து அவர் கல்வித்துறையில் புதிது புதிதாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
 பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
 அதில் இனி மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் கிடையாது எனுவும் இனிமேல் கிரேடு முறையில் தான் மார்க் வரும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
 மேலும் இனிவரும் காலங்களில் பனிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கபட்டு வந்த 1200 மதிப்பெண்களை குறைத்து 600மார்க்குகலாக மற்றம் செய்வதாக அறிவித்தார்.
 இதைதொடர்ந்து பதினொன்றாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என அறிவித்து கல்லூரிகளில் உள்ளது போல அரியர்ஸ் முறை இதில் பின்பற்றப்படும் என தெரிவித்தார்.
 இந்நிலையில் தற்போது புதிதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
 மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41  அறிவிப்புகளை வெளியிட உள்ளோம்.
 இதுகுறித்த அறிவிப்பு வரும் 6 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி அனுமதியுடன் வெளியிடப்படும்.
 இந்த அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிபார்க்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 இதனால் அந்த அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன

Popular Feed

Recent Story

Featured News