பிழயைான சொற்களும் திருத்தமும் - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 21, 2017

பிழயைான சொற்களும் திருத்தமும்

பிழை   - திருத்தம்
அடமழை -அடைமழை
அடமானம் -அடைமானம்
அஞ்சு - ஐந்து
அண்ணாக்கயிறு - அரைஞாண்கயிறு
அதுகள் -அவை

அமக்களம்-அமர்க்களம்
அருகாமையில் -அருகில்
அருவாமனை -அரிவாள்மனை
அவங்க -அவர்கள்
அவரக்காய் - அவரைக்காய்
ஆச்சி -ஆட்சி
ஆத்தங்கரை -  ஆற்றங்கரை
ஆத்துக்காரி - அகத்துக்காரி
ஆனை -யானை
இங்கிட்டு - இங்கு
இடதுகை - இடக்கை
இத்திணை - இத்தனை
இத்துப்போதல் - இற்றுப்போதல்
இரும்பல் - இருமல்
இலமை - இளமை
உசிர் -உயிர்
உடமை -உடைமை
உந்தன் - உன்றன்
ஊரணி -ஊருணி
எகனை - எதுகை
எண்ணை - எண்ணெய்
எம்பது -எண்பது
ஏத்தம் -ஏற்றம்
ஒசத்தி - உயர்த்தி
ஒத்தடம் -ஒற்றடம்
ஒம்பது -ஒன்பது
ஒருவள் - ஒருத்தி
கடகால் - கடைகால்
கடப்பாறை - கடப்பாரை
கட்டிடம் -கட்டடம்
கண்ணாலம் -கல்யாணம்
கத்திரிக்காய் -கத்தரிக்காய்
கம்பிளி -கம்பளி
கயறு -கயிறு
கருவேற்பிலை -கறிவேப்பிலை
கவுனி -கவனி
காக்கா - காக்கை
காத்து -காற்று
கிரணம் -கிரகணம்
குடக்கூலி - குடிக்கூலி
குடத்து -கொடுத்து
கெடிகாரம் -கடிகாரம்
கொடம் -குடம்
கோடாலி -கோடாரி
கோர்வை - கோவை
சமயல் -சமையல்
சாம்ராணி -சாம்பிராணி
சிகப்பு -சிவப்பு
சிலது -சில
சிலவு -செலவு
சீயக்காய் - சிகைக்காய்
சுவற்றில் - சுவரில்
தடுமாட்டம் - தடுமாற்றம்
தலகாணி -தலையணை
தாப்பாள் - தாழ்ப்பாள்
தாவாரம் - தாழ்வாரம்
துடப்பம் - துடைப்பம்
துவக்கப்பள்ளி - தொடக்கப்பள்ளி
துவக்கம் -தொடக்கம்
துளிர் -தளிர்
தொடப்பம் - துடைப்பம்
தொந்திரவு -தொந்தரவு
தேனீர் -தேநீர்
நஞ்சை -நன்செய்
நாகரீகம் -நாகரிகம்
நாத்து -நாற்று
நேத்து -நேற்று
நோம்பு -நோன்பு
பண்டசாலை - பண்டகசாலை
பதட்டம் -பதற்றம்
பயிறு -பயறு
பாவக்காய் -பாகற்காய்
புஞ்சை - புன்செய்
புட்டு - பிட்டு
புண்ணாக்கு - பிண்ணாக்கு
மணத்தக்காளி -மணித்தக்காளி
பேரன் - பெயரன்
பொண்ணு - பெண்
முயற்சித்தான் - முயன்றான்
முழித்தான் - விழித்தான்
முழுங்கு -விழுங்கு
முன்னூறு -முந்நூறு
மெனக்கெட்டு -வினைகெட்டு
மோா்ந்து -மோந்து
ரொம்ப -நிரம்ப
வயறு - வயிறு
வலது பக்கம் - வலப்பக்கம்
வெங்கலம் -வெண்கலம்
வெட்டிப்பேச்சு -வெற்றுப்பேச்சு
வெண்ணை -வெண்ணெய்
வெய்யல் -வெயில்
வேணும் -வேண்டும்
வேண்டாம் -வேண்டா
வேர்வை -வியர்வை
வைக்கல் -வைக்கோல்

Post Top Ad