Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 2, 2017

தொலைநிலை கல்வியில் பிஎச்.டி., படிக்க தடை

தொலைநிலை கல்வியில் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தவும், எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டம் வழங்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஆராய்ச்சி படிப்புகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதிகபட்சமாக, எம்.பில்., படிப்புக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஆறு ஆண்டுகள் மட்டும், அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எம்.பில்., படிக்க, மூன்று பேர்; பிஎச்.டி., படிக்க, எட்டு பேருக்கு மட்டுமே, வழிகாட்டி பேராசிரியர் செயல்படலாம் என்பது உட்பட, பல நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பல்கலைகளில் விதிகளை மீறி, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதனால், அனைத்து பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், கூறியுள்ளதாவது: எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பை, தொலைநிலையில் நடத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில், ஏதாவது பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு அறிவிக்கப்பட்டால், அதில், மாணவர்கள் சேர வேண்டாம். இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை மற்றும் சில பல்கலைகளுக்கு மட்டும், தொழில்நுட்பம் இல்லாத பாடப்பிரிவுகளில், 'ரெகுலர்' படிப்பில், முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி படிப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Popular Feed

Recent Story

Featured News