Join THAMIZHKADAL WhatsApp Groups
பச்சைக்
கம்பளப் புல்வெளி
புல்மேல்
அமர்ந்த பனித்துளி
பசுமை நிறைந்த வயல்வெளி
பனியால்
மூடிய சமவெளி.
வண்ணம் தீட்டா வானவில்
வாசம் வீசும் பூவினம்
தானே முளையும் சூரியன்
தனியே உலவும் சந்திரன்.
கொட்டிக்
கிடக்கும் தாரகை
கண்கள்
சிமிட்டும் மின்மினி
முட்டிக்
குடிக்கும் கன்றுகள்
மோதித்
திரும்பும் கடலலை.
பூத்துக்
குளுங்கும் மரஞ்செடி
படுத்து
உறங்கும் பெருமலை