சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியாகின. மாணவர்களுக்கு, ‘டிஜி லாக்கர்’ என்ற, டிஜிட்டல் முறையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடைத்தாள் ஆய்வுக்கு, ஜூன், 5க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. விடைத்தாள் ஆய்வில், மதிப்பெண் மாற்றம் இருந்தால், விண்ணப்பித்தோருக்கு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பித்தோர் தேவைப்பட்டால், விடைத்தாள் நகலை ஆன்லைனில் பெறலாம்.
இதற்கு, ஜூன் 14 முதல், 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நகல் கிடைத்த பின், விடைத்தாளில் கூட்டல் பிழைகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி மதிப்பெண் கேட்கலாம். விடைகள் மதிப்பிடப்படாமல் விடுபட்டிருந்தாலும், விடைத்தாள் நகல் கிடைத்த ஏழு நாட்களில், மண்டல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆனால், ‘திருத்தப்பட்ட விடைகளுக்கு, மறுமதிப்பீடு வழங்கப்படாது’ என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.