Sunday, July 9, 2017

கிட்னி’ன்னு சாதாரணமா நினைச்சுடாதீங்க… அது இவ்ளோ வேலை பார்க்குது… இதை முக்கியமா படிங்க!!

உடலுக்கு தேவையான சத்துக்களை சீராக தக்கவைத்துக்கொண்டு தேவையற்ற யூரியா போன்ற கழிவு பொருட்களை பிரித்தெடுத்து வெளியேற்றும் பணியை சிறு நீரகம் செய்து வருகிறது.

உடலில் நீரின் அளவை சம நிலையில் பராமரித்தும், உடலிலுள்ளரத்தத்தை தூய்மை செய்யும் பணியையும் மேற்கொள்கிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றும் வேலையை செய்கிறது. இவ்வாறு உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்யும் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானால் கடுமையான பிரசனைகளை எதிர்கொள்ள நேரிடும். சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம்.

இல்லாவிட்டால் நாளடைவில் மேற்சொன்ன எந்த வேலையையும் செய்யாத அளவுக்கு சிறுநீரகம் செயலிழந்து போய்விடும்.
சிறுநீரகம் பதிப்புக்குள்ளானால் அறிகுறியாக சிறுநீரை பிரித்தெடுத்து வெளியேறுவது குறையும்.
பசியின்மை, கை, கால்களில் வீக்கம்,கடுமையான சோர்வு, போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
சிறுநீர் வெளியேறும் உணர்வு தோன்றும் போது சிறுநீரை ஒருபோதும் அடக்கி வைக்கக் கூடாது. தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவுக் கட்டுப்பாடு, கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருத்தல், உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்த்தல்.
அதுபோல் உப்புகள் நிறைந்த ஊறுகாய், நொறுக்கு தீனி வகைகள், அப்பளம்,புளித்த மோர், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள்,துரித உணவுகள் போன்றவற்றை தவிர்த்தால் சிறுநீர பாதிப்பை தடுக்கலாம்.
பெரும்பாலானோருக்கு ஏற்படும் சிறுநீரக பாதிப்பு சிறுநீரகக்கல். சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் ஆரம்பத்தில் படிகம் போல் படிய தொடங்கி கற்கள் பின் இறுகி கடினமான கற்களாக மாற ஆரம்பித்துவிடும்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறினால் அது சிறுநீரக கல்லின் அறிகுறியாக இருக்கும். எனவே உடனடியாக மருத்துவரின் ஆலூசனையை பெறுவது நல்லது.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், போன்ற நோய்களாலும் புகைபிடித்தல், மது அருந்துதல், போன்ற கெட்ட பழக்கங்களாலும் சிறுநீரகத் தொற்றுகள்,சிறுநீரகக் கற்கள், வலி நிவாரணி மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவு, புற்றுநோய் போன்றவற்றாலும் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்.

Popular Feed

Recent Story

Featured News