Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 23, 2017

TNPSC STUDY MATERIALS - ஐஞ்சிறுகாப்பியங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

ஐஞ்சிறுகாப்பியங்கள்




  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தை ஏற்படுத்தியவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை
  • நாக குமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • உதயன குமார காவியம்   = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • யசோதர காவியம்   = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • நீலகேசி  = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
  • சூளாமணி   = தோலாமொழித்தேவர்

ஐஞ்சிறுகாப்பியங்கள் அட்டவணை:

நூல்சமயம்பாவகைஆசிரியர்அமைப்பு
நாக குமார காவியம்சமணம்விருத்தம்5 சருக்கம், 170 பாடல்
உதயன குமார காவியம்சமணம்விருத்தம்6 காண்டம், 369 பாடல்
யசோதர காவியம்சமணம்விருத்தம்வெண்ணாவலூர் உடையார் வேள்5 சருக்கம், 320 பாடல்
நீலகேசிசமணம்விருத்தம்10 சருக்கம், 894 பாடல்
சூளாமணிசமணம்விருத்தம்தோலாமொழித்தேவர்12 சருக்கம்,  2330 விருதப்பாக்கள்




நாககுமார காவியம்

நாககுமாரகாவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 170
  • சருக்கம் = 5
  • பாவகை = விருத்தப்பா
  • சமயம் = சமணம்

பெயர்க்காரணம்:

  • கதைத் தலைவன் நாககுமாரன் பற்றிக் கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.

வேறு பெயர்:

  • நாகபஞ்சமி கதை

பொதுவான குறிப்புகள்:

  • நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்.
  • மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
  • 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
  • இந்நூலை “சொத்தை நூல்” என்கிறார் மது.ச.விமலானந்தம்

மேற்கோள்:

  • அரனின்றிப் பின்னை ஒன்றுமுயிர்க்கு அரணில்லை என்றும்
    மறமின்றி உயிர்க்கு இடர்செய் மற்றொன்றும் இல்லைஎன்றும்
    திறமிகு உணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
    மறம் இதை விட்டு அறத்தில் வாழுமின் உலகத்தாரே




உதயணகுமார காவியம்

உதயனகுமார காவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 369
  • காண்டம் = 6

காண்டங்கள்:

  • உஞ்சைக் காண்டம்
  • இலாவண காண்டம்
  • மகத காண்டம்
  • வத்தவ காண்டம்
  • நரவாகன காண்டம்
  • துறவுக் காண்டம்



வேறு பெயர்:

  • உதயணன் கதை

பொதுவான குறிப்பு:

  • இந்நூலின் மூலநூல் = பெருங்கதை
  • கதைத்தலைவன் = உதயணன்
  • உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.
  • உதயணன் யாழின் பெயர் = கோடபதி
  • “பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை” என்பார்  மது.ச.விமலானந்தம்



மேற்கோள்:

  • வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ
    நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ
    காண என்றன் முன்பாய்க் காரிகையே வந்து, நீ
    தோணி முகம் கட்டு எனச் சொல்லியே புலம்புவான்

யசோதர காவியம்

யசோதர காவியத்தின் உருவம்:

  • ஆசிரியர் = வெண்ணாவலூர் உடையார் வேள்
  • காலம் = 13ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 320
  • சருக்கங்கள் = 5
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்

பொதுவான குறிப்புகள்:

  • வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்தில் இருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
  • “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி கூறப்பட்டுள்ளது.



மேற்கோள்:

  • யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
  • தம்மைக் கொல்லின் வான்உயிர் இன்பமே
    அல்லால் வருநெறி திரியும் அன்றி
    ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்
    மற்றொன்றும் இன்றி மானுடர்வாழ்வு மண்ணில்
    மரித்திடும் இயல்பித்ரு அன்றோ

நீலகேசி

நீலகேசியின் உருவம்:

  • ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
  • காலம் = 6ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 894
  • சருக்கம் = 10
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்



வேறு பெயர்:

  • நீலகேசி தெருட்டு
  • நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை)

பெயர் காரணம்:

  • நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
  • கேசி = கூந்தலை உடையவள்
  • நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்

பொதுவான குறிப்புகள்:

  • நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
  • இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
  • நூலுக்கு உரை எழுதியவர் = திவாகர வாமன முனிவர்.
  • இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.

மேற்கோள்:

  • கோறல் பொய்த்தல் கொடுங்களவு
    நீங்கிப் பிறர் மனைகண்மேல்
    சேரல் இன்றிச் செலும் பொருள்மேல்
    சென்ற சிந்தை வேட்கையினை
    ஆறு கிற்பின் அமர் உலகம்
    நுன்கண் கடியதாம் என்றாள்

சூளாமணி

சூளாமணியின் உருவம்:

  • ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
  • காலம் = கி.பி.பத்தாம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 2330
  • சருக்கம் = 12
  • பாவகை = விருத்தம்
  • சமயம் = சமணம்



பெயர்க்காரணம்:

  • மிக்க ஒளியையும் சிறப்பினையும் உடையது சூளாமணி. ஆற்றல்களும் சிறப்புகளும் கொண்டு திவிட்டனும் விசயனும் சூளாமணி போல் ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

  • நூல் ஆசிரியர் தோலாமொழித் தேவரின் இயற் பெயர் வர்த்தமான தேவர்.
  • இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகத மாபுராணம்
  • சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
  • “விருதப்பாவை கையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி ஆசிரியரையும் மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
  • “சிந்தாமணியை விடச் செப்பமான நடையை உடையது சூளாமணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
  • “சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும் இனிமையும் இல்லை” என்கிறார் தெ.பொ.மீ



மேற்கோள்:

  • ஆணை துரப்ப அரவு உரை ஆழ்குழி
    நானவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
    தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
    மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top