Tuesday, August 8, 2017

பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுடில்லி: பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இதற்காக, அவர்களது பெற்றோரை ஊக்குவிக்கும் வகையிலும், பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியதாவது: சிறுபான்மையினர் விவகார அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பை முடிக்கும் முஸ்லிம் மாணவியருக்கு, 10 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 முடிக்கும் மாணவியருக்கு, 12 ஆயிரம் ரூபாயும், உதவித் தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில், உதவித் தொகை பெற்ற மாணவியர், பட்டப்படிப்பை முடித்ததும், அவர்களுக்கு, 51 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். தற்போது, இத்திட்டத்திற்கென தனி இணையதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில், இந்த திட்டம் தொடர்பான அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன், திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular Feed

Recent Story

Featured News