Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 11, 2017

யுகம்

யுகம் என்பது இந்துக்களின் கால கணிப்பு முறையில் காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:
கிருத யுகம் - அனைவரும் அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 21 அங்குலம் ( 924 cm ) உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 1,00,000 வருடமும் வாழ்வார்கள்
திரேதா யுகம்- நான்கில் , மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 14 ( 616 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10,000 வருடமும் வாழ்வார்கள்
துவாபர யுகம்-சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 ( 308 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 1000 வருடமும் வாழ்வார்கள்
கலியுகம்-நான்கில் , ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 3.5 ( 154 cm )அங்குலம் உயரம் உள்ளவர்களாகவும், 100 வருடமும் வாழ்வார்கள்

இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது.துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.


பகுப்பு முறை
கால பிரிவுஅளவு முறை
15 நிமிடம் 1 காஷ்டை
30 காஷ்டை 1 கலை
30 கலை 1 முகூா்த்தம்
30 முகூா்த்தம் 1 அகோரத்திரம் ( நாள் )
15 அகோரத்திரம் 1 பட்சம்
2 பட்சம் 1 மாதம்
6 மாதம் 1 அயனம்
2 அயனம் 1 வருடம்


இவ்வாறாக காலத்தை நுண்பிரிவாகவும்,
பெரும் பிரிவு
கிருத யுகம் - 1,728,000 வருடங்கள்
திரேதா யுகம் - 1,296,000 வருடங்கள்
துவாபர யுகம் - 864,000 வருடங்கள்
கலியுகம் - 432,000 வருடங்கள் [ கலியுகம் 3102 BCE ல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]

இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் அல்லது சதுா்யுகம். 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம். 14 மன்வந்திரங்கைளக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
கல்பங்கள்
வாமதேவ கல்பம்
ஸ்வேத வராக கல்பம்
நீல லோகித கல்பம்
ரந்தர கல்பம்
ரெளரவ கல்பம்
தேவ கல்பம்
விரக கிருஷ்ண கல்பம்
கந்தற்ப கல்பம்
சத்திய கல்பம்
ஈசான கல்பம்
தமம் கல்பம்
சாரஸ்வத கல்பம்
உதான கல்பம்
காருட கல்பம்
கெளரம கல்பம்
நரசிம்ம கல்பம்
சமான கல்பம்
ஆக்நேய கல்பம்
சோம கல்பம்
மானவ கல்பம்
தத்புருஷ கல்பம்
வைகுண்ட கல்பம்
லெச்சுமி கல்பம்
சாவித்ரி கல்பம்
கோர கல்பம்
வராஹ கல்பம்
வைராஜ கல்பம்
கெளரி கல்பம்
மகோத்வர கல்பம்
பிதிா் கல்பம்

தற்போது நடந்து கொண்டிருப்பது ஸ்வேத வராக கல்பம் ஆகும்.

Popular Feed

Recent Story

Featured News