Saturday, November 4, 2017

வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - 4 தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர்.

வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - 4 தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர்.தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது.இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது.எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து. ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல்,வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது

Popular Feed

Recent Story

Featured News