Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 21, 2017

வெங்காயத்தின் அரிய மருத்துவ குணங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வெங்காயத்தின் அரிய மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் வெங்காயம், பல ஆரோக்கிய நன்மைகளின் கூடாரம். 

வெங்காயத்தின் இயல்பைப் பார்த்தால், அதன் காரத் தன்மைக்குக் காரணம், அதில் உள்ள ‘அலைல் புரொப்பைல் டை சல்பைடு’ என்ற வேதிப்பொருள். அதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. 

தொடர்ந்து போதுமான அளவு வெங்காயம் எடுத்துக்கொள்வதன் மூலம், நம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். 

ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை போன்றவற்றைக் குணமாக்கும் சக்தியும், கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. 


ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பைக் கரைக்கும் தன்மை வெங்காயத்துக்கு இருக்கிறது. எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 

தயிர், மோர், நெய் போன்ற மற்ற உணவுப் பொருட்களோடு சேர்த்துச் சாப்பிடும்போது, உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணம்கொண்டது வெங்காயம். இதில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நீர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயத்தையும், கடுகு எண்ணெய்யையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். 

தட்பவெப்பநிலை மாறும்போது ஏற்படும் இருமல், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவை, சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவதால் நீங்கும். 

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top