Thursday, January 25, 2018

முதுநிலை மருத்துவ படிப்பு 'நீட்' தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவு தேர்வு முடிவுகள்,https://neetpg.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலையில், எம்.டி., - எம்.எஸ்., என்ற பட்டமேற்படிப்பு மற்றும் டிப்ளமா மேற்படிப்புக்கு, 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும், 8,000 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, நீட் நுழைவு தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இந்நிலையில், 2018 -19 கல்வியாண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான, நீட் நுழைவு தேர்வு, ஜன., 7ல், நாடு முழுவதும், 123 நகரங்களில், ஆன்லைன் முறையில் நடந்தது. இந்த தேர்வை, தமிழகத்தில் இருந்து, 20 ஆயிரம் பேர் உட்பட, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான முடிவுகள், வரும், 30ம் தேதி வெளியிடப்படும் என, தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று நேற்று முன்தினம் இரவு,https://neetpg.nbe.edu.in என்ற இணையதளத்தில், தேர்வு முடிவுகளை, தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News