Wednesday, February 14, 2018

200 ஆண்டு பழமையான தரங்கம்பாடி ஓவியங்கள்!!!

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள் தரங்கம்பாடியில் காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி 1620ஆம் ஆண்டு முதல் 1845ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. 1786ஆம் ஆண்டு முதல் 1808ஆம் ஆண்டு வரை அங்கு கவர்னராக இருந்த பீட்டர் அன்கர் சிறந்த ஓவியராவார். அப்பகுதியின் நிலக் காட்சிகளை ஓவியங்களாக வரைந்துள்ளார். அவரது ஓவியங்களை நார்வே நாட்டிலுள்ள ஓஸ்லோ நகரின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

அந்த ஓவியங்கள் கவனமாகப் பிரதியெடுக்கப்பட்டு இந்தோ-டேனிஷ் கலாச்சார மையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அந்தக் காலகட்டத்து மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், நிலக் காட்சிகள் ஆகியவற்றை இந்த ஓவியங்கள் மூலம் அறிய முடிகிறது.

டென்மார்க்கைச் சேர்ந்த தரங்கம்பாடி கழகத்தின் தலைவர் பால் பீட்ட்ர்சன் கண்காட்சி திறப்புவிழாவில், “முறையாக அனுமதி வாங்கி இந்த ஓவியங்கள் பிரதியெடுக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கவர்னர் அவரது காலத்து வாழ்க்கைமுறையைத் தனது ஓவியங்களில் பிரதிபலித்துள்ளார். தரங்கம்பாடி மக்களுக்கு இதைக் காண்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News