Sunday, February 4, 2018

விண்ணப்பித்துவிட்டீர்களா? இந்திய ரயில்வேயில் 26502 காலியிடங்கள்!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் மூலம் இயங்கி வரும் இந்திய ரயில்வே நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் மற்றும் டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் மூலம் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்தவுள்ளன.

காலியிடங்களின் விவரங்கள்: 26502
அசிஸ்டெண்ட் லோகோ பைலட்: 17673 காலியிடங்கள்
டெக்னீசியன்: 8829 காலியிடங்கள்
இதில் தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு மட்டும் 945 இடங்கள் உள்ளன. அதாவது பொது பிரிவினருக்கு 437 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 209 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 134 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 165 காலியிடங்களும், முன்னாள் இராணுவத்தினருக்கு 63 காலியிடங்களும், மாற்றுத்திறனாளிக்கு 4 காலியிடங்களும் உள்ளன.
2018 ஜூலை முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் இராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி-
அசிஸ்டெண்ட் லோகோ பைலட்:
ஆர்மட்சூர் & காயில் வைண்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், ஹீட் என்ஜீன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், மெக்கானிக் டீசல், மெக்கானிக் மோட்டார், மில்ரைட் மெயின்டெனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் ரேடியோ & டி.வி, ஏ.சி மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், டர்னர், வயர்மேன் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு அல்லது மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பி.இ/ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (பி.இ/ பி.டெக் படித்தவர்கள் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றிருந்தால் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க இயலாது).
டெக்னீசியன் Forger and Heat Treater, பைண்டர், ஃபிட்டர், கார்பெண்டர், வெல்டர், பிளம்பர், பைப் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன், மெக்கானிக் ஆட்டோ எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், வயர்மேன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், மெக்கானிக் பவர் எலெக்ட்ரானிக்ஸ், வெல்டர், ஏ.சி மெக்கானிக் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை?
முதல்கட்டமாக CBT எனப்படும் கம்ப்யூட்டர் பேஸ்ட் தேர்வு இருக்கும். கம்ப்யூட்டர் பேஸ்ட் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். கணிதம், ஜெனரல் அவேர்னஸ், ஜெனரல் இன்டலிஜன்ஸ், ரீசனிங் பிரிவுகளில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு 60 நிமிடம் வழங்கப்படும்.
தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, அடுத்தகட்டமான CBT 2nd Stage தேர்வுகள் இருக்கும். இத்தேர்வில் இரண்டு பகுதிகள் உள்ளன. Part A பிரிவில் கணிதம், ஜெனரல் இன்டிலிஜின்ஸ் & ரீசனிங், சயின்ஸ் & என்ஜினீயரிங், ஜெனரல் அவேர்னஸ் ஆகிய பகுதிகளில் இருந்து 100 கேள்விகளுடன் 90 நிமிடங்கள் வழங்கப்படும். Part B பிரிவில் டெக்னிக்கல் சம்பந்தமான 75 கேள்விகள் இருக்கும். இத்தேர்வுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கப்படும். பின்னர், தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும். 2018, ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதத்திற்குள் முதல்கட்ட சி.பி.டி தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?.
1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250 (Refundable). விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
2. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் இருக்கும் “ONLINE application link CEN 01/2018" பிரிவுக்குச் சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
3. பின்னர், Login id மற்றும் பிறந்த நாள் மற்றும் வருடத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பகுதிக்குச் செல்லவும். அதில் சரியான மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்கவும்.
4. செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2018
விவரங்களுக்கு

Popular Feed

Recent Story

Featured News