Sunday, February 18, 2018

தசாவதாரம் (இந்து சமயம்)

திருமாலும், திருமகளும் பாற்கடலில்தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் திருமாலைக் காண வந்தார்கள். அவர்களை ஜெய விஜய எனும் இரு வாயிற்காவலர்களும் தடுத்தனர். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களைத் தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களைக் கொடூர அசுரர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டனர். இதையறிந்த திருமால் தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாகப் பிறக்கும் போது, அவர்களை ஆட்கொள்ளும்படி செய்ததாகத்க் தசாவதாரங்களுக்கு காரணம் சொல்லப்படுகிறது.
பத்து அவதாரங்கள் அல்லது தசாவதாரங்கள் என்று கூறப்படுவன:
  1. மச்ச அவதாரம்
  2. கூர்ம அவதாரம்
  3. வராக அவதாரம்
  4. நரசிம்ம அவதாரம்
  5. வாமண அவதாரம்
  6. பரசுராம அவதாரம்
  7. இராம அவதாரம்
  8. கிருஷ்ண அவதாரம்
  9. கௌதம புத்தர்
  10. கல்கி அவதாரம்
பௌத்த மதத்தினை தோற்றுவித்தவரான கௌதம புத்தர்திருமாலின் தசாவதாரங்களில் ஒருவராக கருதப்படுகிறார். இதுகுறித்து புராணங்களில் செய்தியுள்ளது. அத்துடன் மகாபலிபுரத்தில் அரியரன் சிற்பத்தின் மேல் உள்ள கல்வெட்டொன்றில் தசாவதாரம் குறித்து கீழ்க்கண்ட வடமொழி சுலோகம் எழுதப்பெற்றுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News