Sunday, February 25, 2018

பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், 'நிடி ஆயோக்' வெளியிட்ட சுகாதார குறியீட்டில், கேரள மாநிலம், நாட்டிலேயே முதலிடத்தை பெற்றது. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும், சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், புதிய சுகாதார கொள்கையை அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
திட்டக் குழு உறுப்பினரும், கேரள பல்கலையின் முன்னாள் துணைவேந்தருமான, இக்பால் தலைமையில், 17 பேர் அடங்கிய கமிட்டியின், புதிய சுகாதார கொள்கைக்கு, முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஒப்புதல் வழங்கப்பட்டது.இதன்படி, பள்ளிகளில், முதல் வகுப்பில் குழந்தைகளை சேர்க்கும் போது, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 
அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளுக்கேற்ற வகையில், சுகாதாரமான கழிப்பறைகள் அமைத்தல்; பெண்கள் படிக்கும் பள்ளி களில், சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரம் மற்றும் நாப்கின் அகற்றும் இயந்திரங்களை பொருத்துதல் உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Popular Feed

Recent Story

Featured News