Sunday, February 4, 2018

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.!

வாட்ஸ் செயலின் அடுத்த அப்டேட்டாக மெசெஜை 
பேசினால், அதுவாகவே டைப் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய வேகத்தில் பயணித்து வருகிறது. வாட்ஸ்
அப்பை பயன்படுத்தும் மக்களை கவர்வதற்காக புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் தெரிவிக்கப்பட்ட வாய்ஸின் மூலம் தகவலை டைப் செய்து வசதி தற்போது புழகத்திற்கு வந்துள்ளது.
இத்துடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும், பணப்பரிமாற்ற வசதியும் விரைவில் அப்டேட் வெர்ஷனில் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் என்று அழைக்கப்படும் இந்த ஆப்ஷனில் நெட் பேங்க் போன்று பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம். சமீபத்தில் இதுக் குறித்த தகவலை அறிவித்த அந்நிறுவனம், இதுக் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிகளிடன் கலந்து பேசி வருவதாகவும், அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், மெசெஜை பேசினால் அதுவாகவே டைப் செய்யும் அப்டேட் தற்போது அறிமுகமாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்பின் செட்டிங்கிஸ் சென்று, விருப்பமான மொழியை முதலில் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு, தமிழ் இந்தியா என்ற ஆப்ஷனை தேர்வு செய்துக் கொள்ளவும். பின்பு அதில் தோன்றும் கிபோர்ட் வாய்ஸ் டைப்பிங்கில் பேசினால், நாம் அனுப்ப வேண்டிய தகவல் தானாகவே டைட் செய்யப்பட்டு விடும்.
வாட்ஸ் அப்பின் இந்த புதிய அப்டேட், பயன்படுத்துவோர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான தவறான மெசேஜ்களை 10 நிமிடத்திற்கு டெலிட் செய்யும் வசதி மற்றும் ஸ்டெடஸ் வசதி ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட்டிற்கு பிறகு, பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரே மாதத்தில் கணிசமாக உயர்ந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News