Saturday, March 3, 2018

மரபணு மருத்துவம் குறித்த சான்றிதழ் படிப்பை அளிக்கும் வகையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சனோஃபி ஜென் என்ற நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்டி, மரபணு கோளாறுகள் ஏற்படும் அரிதான நோய்கள் மற்றும் மரபணு குறைபாடுகளால்

பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சான்றிதழ் படிப்பு பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியது:
அரிதான மரபணு நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு சரியான சிகிச்சை அளிப்பதற்கு மரபணுக்கள் தொடர்பான படிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகிய இரண்டும் முக்கியக் கருவிகளாகும். அதற்கு இந்த சான்றிதழ் படிப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகும். 
பல்கலைக்கழகத்தின் மரபணு மருத்துவத் துறையின் சார்பில் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தோருக்கு திருமணத்துக்கு முன்பு, கர்ப்பகாலத்துக்கு முன்பு, பேறுகாலத்துக்கு பின்னர் ஆகிய சமயங்களில் மரபணு நோய்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார் அவர். 
பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் டி.பாலசுப்ரமணியன், சனோஃபி குழும மேலாண்மை இயக்குநர் என்.ராஜாராம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Popular Feed

Recent Story

Featured News