Monday, April 2, 2018

ஆசிரியப்பா

நால்வகைப் பாக்களில் இரண்டாவதாக அமைவது ஆசிரியப்பாவாகும். இதற்கு அகவற்பா என்ற வேறு பெயரும் உண்டு. இப்பா ஓர் ஆசிரியனைப்போல ஒரு கருத்தை விரிவாகக் கூறுவதால் இப்பெயர் பெற்றது.
 
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
·         அடிதோறும் நாற்சீர்களைப் பெற்று வரும்.
·         இடையிடையே குறளடி, சிந்தடிகள் அமைவதும் உண்டு.
·         அகவலோசை பெற்றுவரும்.
·         ஆசிரியத்தளைகளை மிகுதியாகவும் பிற தளைகள் விரவியும் அமைதல்.
·         மூன்றடி முதலாக பல அடிகளில் பாடப்படுதல்.
·         ஒருவிகற்பத்தானும் பல விகற்பத்தானும் அமைதல்.
·         ஈற்றடியின் ஈற்றசை , , என், , , ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல்.
·         நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் மற்றும் வஞ்சித்தளைகள் வாராதிருத்தல் என்பன ஆசிரியப்பாவின் பொது இலக்கணமாகும்.

ஆசிரியப்பா வகைகள் (நான்கு)
1.       நேரிசை ஆசிரியப்பா
2.       இணைக்குறள் ஆசிரியப்பா
3.       நிலைமண்டில ஆசிரியப்பா
4.       அடிமறிமண்டில ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி மூச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் அமைவது நேரிசை ஆசிரியப்பாவாகும்.
எ.கா.      தானே முத்தி தருகுவன் சிவனவன்
அடியன் வாத வூரனைக்
கடிவில் மனத்தால் கட்டவல் லார்க்கே.

இணைக்குறள் ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, முதலடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைக் கொண்ட அளவடிகளாகவும், இடையிடையே குறளடி, சிந்தடிகள் விரவியும் அமைவது இணைக்குறள் ஆசிரியப்பாவாகும்.
எ.கா.      நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே

நிலைமண்டில ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, அனைத்து அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டு அமைவது நிலைமண்டில ஆசிரியப்பாவாகும்.
எ.கா.      தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்

அடிமறிமண்டில ஆசிரியப்பா
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று,  அனைத்து அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டமைவதோடு பாடலில் எந்த அடியை எவ்விடத்தில் மாறினாலும் ஓசையும் பொருளும் மாறாமல் வருவது அடிமறிமண்டில ஆசிரியப்பாவாகும்..
எ.கா.      மாறாக் காதலர் மலைமறந் தனரே
யாறாக் கட்பனி வரலா னாவே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே

Popular Feed

Recent Story

Featured News