Tuesday, June 26, 2018

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு: ஜூன் 28-இல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் ஜூன் 28-ஆம் தேதி முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.




இது குறித்து அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1 சிறப்புத் துணைத்தேர்வு எழுத அரசுத் தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உள்பட) வியாழக்கிழமை பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செய்முறைத் தேர்வு உள்ள பாடங்கள் எழுதுவோர் கவனத்துக்கு...கடந்த மார்ச் 2018-இல் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வின்போது செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்துத் தேர்வில் மட்டும் பங்கேற்று எழுத்துத் தேர்வு, அகமதிப்பீட்டில் மொத்தம் 35 மற்றும் அதற்கு மேல்
மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள், உடனடி சிறப்புத் துணைத் தேர்வின்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதுமானது.
அந்தத் தேர்வர்கள் எழுத்துத் தேர்வை மீண்டும் எழுத முடியாது. செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறாத தேர்வர்கள் எழுத்துத் தேர்வை மட்டும் எழுதினால் போதுமானது. அந்தத் தேர்வர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டியதில்லை.



மேலும், அதிகபட்ச மதிப்பெண் 75 கொண்ட தொழிற்கல்வி செய்முறை பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News