Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 29, 2018

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு: ஜூலை 11, 12-இல் கலந்தாய்வு

சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் சட்டப் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 11, 12 ஆகிய இரு தினங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலையும் பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆற்றல்சார் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.




இதில் முதல் கட்டமாக ஆற்றல் சார் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜூலை 11, 12 தேதிகளில் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது.



இந்தப் பள்ளியில் வழங்கப்படும் பி.ஏ.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.சி.ஏ.-எல்.எல்.பி. ஆகிய நான்கு படிப்புகளுக்கு விண்ணப்பித்த 3,551 பேரில் 3,351 மாணவ, மாணவிகள் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்களை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.