Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 19, 2018

பிளஸ்–1 விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் பிளஸ்–1 தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இவ்விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து நாளை (புதன்கிழமை) முதல் 22–ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.



இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News