Tuesday, June 26, 2018

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள்: அரசாணை வெளியீடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 264 புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை புதிதாகத் தோற்றுவிக்கவும் நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.



கல்லூரி கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று, 2018-19-ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும், இந்தப் பாடப் பிரிவுகளை கையாள புதிதாக உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். 



அதன்படி, 61 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 75 இளநிலை, 53 முதுநிலை, 65 எம்.பில்., 71 பி.எச்டி. என மொத்தம் 264 புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், இந்தப் பாடப் பிரிவுகளைக் கையாள 270 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கியும் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News