Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 19, 2018

போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி: ஜூன் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வர்களுக்கான இலவச முன்தேர்வு பயிற்சி வகுப்புகளில் சேர ஜூன் 29 -க்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:



சென்னைப் பல்கலைக்கழகமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் முன்தேர்வுப் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்த உள்ளன. 

திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.



இதில், பங்கேற்க விரும்புவோர் உரிய கல்விச் சான்றுகளுடன் ஜூன் 29 -ஆம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டும் மைய இயக்குநர் அலுவலகம் அல்லது சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News