Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 30, 2018

Admin post only.... இனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்! - வாட்ஸ்அப் அப்டேட்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போது, வாட்ஸ்அப்பில் புதிதாக ஒரு வசதி பீட்டா வெர்ஷன் மூலம் பயனர்களால் சோதனைசெய்யப்பட்டுவருகிறது. இதற்கு முன், வாட்ஸ்அப் குழுவில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம். ஆனால், இனி அந்தக் குழுவின் அட்மின் நினைத்தால் மட்டுமே அனைத்து நபர்களும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும்.




வாட்ஸ்அப் ஃபீட்டா ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.18.201 மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்ஷன் 2.18.70 இவ்விரண்டு ஃபீட்டா வெர்ஷன்களிலும் இந்தப் புதிய வசதி சோதனையில் உள்ளது. இதன்படி, வாட்ஸ்அப்பின் குரூப் செட்டிங்ஸில் sent messages என்ற ஆப்ஷன் இருக்கும். அதைக் க்ளிக் செய்தால், All participants அல்லது only admin என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். only admin என குரூப் செட்டிங்கை மாற்றினால், குழுவில் உள்ள அட்மின்கள் மட்டுமே அந்தக் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும். All participants ல் குரூப் செட்டிங்கை மாற்றினால், அனைவரும் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம். இந்த வசதி விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குறிப்பிட்ட நபர்களை மட்டும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியாதபடி ப்ளாக் செய்யும் வசதியும் இனி எதிர்காலத்தில் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News