Wednesday, June 27, 2018

இரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் பழங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?

நமது உடலில் பாகங்களுக்கும் பிராணவாயு மற்றும் சக்தியை முக்கிய பங்கு வகிப்பது இரத்தம்ஆகும். நமது உடலில் தேவையான அளவு இரத்தம் இல்லை எனில் நமக்கு சோர்வு,அசதி, உடல் உறுப்புகளின் செயல்திறன் குறைவு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். இவற்றை தவிர்க்க நாம் இரத்தத்தை அதிகரிக்க உதவும் உணவுகளை உண்ண வேண்டும்.



இப்பொழுது நாம் இரத்தத்தை அதிகரிக்க உதவும் பலன்களை பற்றி நண்பர்களே.நீங்கள் அவற்றை உண்டு பயன்பெறவும்.



1. உலர் திராட்சை

உலர் திராட்சையில் தேவையான அளவு இரும்புச்சத்து உள்ளது. அவற்றை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடம்பில் இரதம் அதிகரித்து ஆரோக்கியமுடன் வாழ வழிவகுக்கும். 100 கிராம் திராட்சையில் 2 மில்லிகிராம் அளவு இரும்புசத்து உள்ளது.

2. பேரிச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் அதிக அளவு இரும்பு ,சுண்ணாம்பு,கால்சியம், நார்ச்சத்து மற்றும் இதரசத்துக்கள் நிறைந்துள்ளது.அவை உங்களின் உடல் இரத்தத்தை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.எனவே தினமும் மூன்றிலிருந்து நான்கு பேரீச்சம்பழத்தை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே.



3. நெல்லிக்கனி

ஒரு நெல்லிக்கனியினை உண்டு வந்தால் 10 ஆப்பிள் உண்பதற்கு நிகரான சத்துக்களை பெற உதவும் என்ற சொல் உண்டு. ஆம் அது உண்மைதான். தினமும் ஒரு நெல்லிக்கனியினை உண்டு வருவதனால் உங்கள் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் உங்களை வைத்துக்கொள்ள உதவும்.

நெல்லிக்கனியில் அதிக அளவு விட்டமின்களும் மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளது.எனவே தினமும் ஒரு நெல்லிக்கனியினை உண்டு வாருங்கள் நண்பர்களே.

4. மாதுளை


மாதுளம் பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. இவற்றை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்களின் உடலில் இரத்த உற்பத்தி அதிகரித்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். மேலும் மாதுளம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் ஆண்களின் விந்தணுக்கள் அதிகரிக்கும்.

5. அத்தி பழம்

அத்தி பழத்தில் அதிக அளவு இரும்பு, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளது.இவற்றை தினமும் உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்கும், ஆண்மை அதிகரிக்கும், மலசிக்கல் பிரச்சினையை தடுக்க உதவும்.



6. ஆப்ரிகாட்ஸ்

ஆப்ரிகாட்ஸ் பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களில் உடலில் இரத்தம் அதிகரிக்கும். எனவே தினமும் ஆப்ரிகாட் பழங்களை சாப்பிட்டு வாருங்கள் நண்பர்களே.

Popular Feed

Recent Story

Featured News