Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 19, 2018

நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




சண்டிகரில் செயல்படும் ‘போஸ்ட் கிராட்ஜூவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரிசர்ச்’, கல்வி நிறுவனத்தில் நர்சிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

படிப்புகள்:



பி.எஸ்சி.,- நர்சிங் (4 ஆண்டுகள்) மற்றும் பி.எஸ்சி.,-நர்சிங் (போஸ்ட் பேசிக் - 2 ஆண்டுகள்)

தகுதிகள்:

4 ஆண்டு நர்சிங் படிப்பில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. பள்ளிப் படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 2 ஆண்டு நர்சிங்(போஸ்ட் பேசிக்) படிப்பிற்கு பள்ளி படிப்புடன், ஜெனரல் நர்சிங் படிப்பில் குறைந்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:



பி.எஸ்சி.,நர்சிங் - 25 வயதிற்குள் இருத்தல் அவசியம். பி.எஸ்சி.,நர்சிங் (போஸ்ட் பேசிக்) - 45 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

சேர்க்கை முறை:

நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். ஆங்கில வழியில் 100 மதிப்பெண்களுக்கு ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். இதில் தகுதி பெற்ற மாணவர்கள் கலந்தாய்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் சேர்க்கை பெறுவர்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 8

தேர்வு நாள்: ஆகஸ்ட் 12

விபரங்களுக்கு: Click Here