Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 1, 2018

மீன்வளப் பல்கலை.: தற்காலிக தரவரிசைப் பட்டியல் வெளியீடு

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியல் மீன்வளப் பல்கலைக்கழக இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.



நாகை, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சுக. பெலிக்ஸ் மாணவர் சேர்க்கைக்கான தற்காலிக தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டார்.

பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) அ. சீனிவாசன், மாணவர் சேர்க்கை குழுத் தலைவர் சி.ஆ. சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாணவி முதலிடம்: தற்காலிக தரவரிசைப் பட்டியல் குறித்து பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழுத் தலைவர் சி.ஆ. சண்முகம் கூறியதாவது : 

இளநிலை மீன்வள அறிவியல் (B.F.Sc) பட்டப் படிப்புக்கு 2,956 விண்ணப்பங்களும், இளநிலை மீன்வளப் பொறியியல் (B.E) பட்டப் படிப்புக்கு 929 விண்ணப்பங்களும், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் (B.Tech) பட்டப் படிப்புக்கு 527 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.



தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி ஆ. எமிமா 199.00 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி சு. பவித்ரா ரஜி 198.75 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், தேனியைச் சேர்ந்த மாணவி மு. ரோஷினி 197.75 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். இளநிலை மீன்வள அறிவியல் பிரிவில் 141 இருக்கைகளும், இளநிலை மீன்வளப் பொறியியல் பிரிவில் 30 இருக்கைகளும், இளநிலை உயிரி தொழில்நுட்பவியல் பிரிவில் 40 இருக்கைகளும் உள்ளன. 

நிகழாண்டில், நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சேலம் மாவட்டங்களிலிருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்றார் அவர்.