Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 24, 2018

மருத்துவம் சாரா படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் சேர ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்துக் கல்லூரியின் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சி ரோட்டரி சங்கத்துடன் (கிழக்கு) இணைந்து ஆழ்வார்பேட்டையில் சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியை கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.



சுகாதார உதவியாளர், அறுவை சிகிச்சைக் கூடம், ரேடியாலஜி, டயாலிசிஸ் டெக்னீசியன், ஆய்வகம் என மருத்துவம் சாராத ஐந்து பட்டயப் படிப்புகள் இங்குள்ளன. பட்டயப் படிப்புகளின் காலம் ஓராண்டு ஆகும். இது தவிர ஆங்கிலம் சரளமாக பேசுதல், அடிப்படை ஆங்கிலம், கணினி மென்பொருள் ஆகியவற்றில் பகுதி நேர படிப்புகளும் உள்ளன.

ஓராண்டு படிப்புக்கான கட்டணம் ரூ.1,000. அதே போன்று பகுதி நேர படிப்புகளுக்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்டயப் படிப்பில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. பகுதி நேர படிப்புக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் சேரலாம். வகுப்புகள் ஜூலை மாதத்தில் தொடங்கும். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.



கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து தகவல் பெற 98403 93630, 044- 24988401 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News