Join THAMIZHKADAL WhatsApp Groups
இதுகுறித்து மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூன் 16 -ஆம் தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்தக் காலக்கெடு ஜூன் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மீன்வளப் பல்கலைக்கழக சேர்க்கைக்கு www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.