Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 15, 2018

வீட்டிலிருந்தபடியே அரசு சான்றிதழ்களுக்கு இனி பதிவு செய்யலாம்!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு சான்றிதழ்களுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே பதிவு செய்திட புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் சான்றிதழ்கள், இதர சேவைகள் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தற்போது வேலூா மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 27 சேவை மையங்களும், தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலமாக 190 மையங்களும், மகளிர் திட்டம் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

சில நாட்களாக இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்கள் பதிவு செய்திட பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனா. இதனால், சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது அரசு கவனத்தில் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசு இ-சேவை இணையதளத்தில் ஓபன் போர்டல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.



இந்த போர்டல் மூலம் பொதுமக்கள் அனைத்து சான்றிதழ்களையும் இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தபடியே கணினி, மடிக்கணினி மூலம் பதிவு செய்திடலாம். இந்த பதிவுக்கு சான்றிதழுக்கு ரூ.67 பதிவுக் கட்டணமாக இணையவங்கி மூலம் பணப்பரிவாத்தனை செய்திட வேண்டும்

Popular Feed

Recent Story

Featured News