Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 11, 2018

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்ப விநியோகம் இன்று தொடக்கம்




தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்குகிறது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நீட் தேர்வு தகுதி மதிப்பெண் அடிப்படையில் நிகழ் கல்வியாண்டில் (2018-19) மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிக்கையை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் 
ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:




சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பத்தை வரும் 18 -ஆம் தேதி வரை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். 

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க ஜூன் 19-ஆம் தேதி கடைசி நாளாகும்.

70,000 விண்ணப்பங்கள்: அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு 45 ஆயிரம், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 25 ஆயிரம் என மொத்தம் 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

இணையதளத்திலிருந்தும்: www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11 -ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500. தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000.
வரைவோலை: எம்.பி.பி.எஸ்.அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய விண்ணப்பப் படிவம், தகவல் குறிப்பேடு ஆகியவற்றை
"பஏஉ நஉஇதஉபஅதவ, நஉகஉஇபஐஞச இஞஙஙஐபபஉஉ, ஓஐகடஅமஓ, இஏஉசசஅஐ-10" என்ற பெயரில் தொகைக்கேற்ப (ரூ.500 அல்லது ரூ.1,000) வரைவோலையாக தொடர்புடைய மருத்துவக் கல்லூரியின் முதல்வரிடம் அளித்துப் பெறலாம். 

விண்ணப்பம் கோரும் வேண்டுகோள் கடிதத்தையும் வரைவோலையுடன் இணைத்து அளிக்க வேண்டும். 



மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ரூ.100-க்கு வரைவோலை எடுத்து பொது விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் போதுமானது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.