Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 24, 2018

நரை முடியை விரட்ட இயற்கை வழிகள்…


அழகு என்றால் உச்சி முதல் பாதம் வரை பராமறிக்க வேண்டும். ஒருவருக்கு வயதாகி விட்டது என்றால் அதற்கான அடையாளமே வெள்ளை முடிதான். ஆனால் இப்போது எல்லாம் நரை முடி என்பது 30 வயதை எட்டுவதற் குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகின்றன. இதன் காரணமாக இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை தற்போது உள்ள தலைமுறையை பதம் பார்த்து வருகிறது.



நரை முடியைப் போக்குவதற்கு மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகிறது. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. எனவே நரைமுடியை விரட்ட இயற்கை வழிகளை தேர்ந்தெடுப்பதே ஒரே தீர்வாகும்.
இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு நீர்.
.
1] முதலில் நாம் 5-6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்றாக கழுவி, தோலை நீக்கி, அந்த தோலைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2] பிறகு உருளைக்கிழங்கு தோலை இரண்டு கப் நீரில் போட்டு, 15-20 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.



3] ஆறியபிறகு நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பிறகு அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து வைக்கவும்.
4] தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பிறகு, கண்டிஷனர் போட்டு 1-2 நிமிடம் கழித்து நீரில் தலைமுடியை அலசவும்.
5] அடுத்து உருளைக்கிழங்கு தண்ணீரைக் கொண்டு ஸ்கால்ப்பால் மசாஜ் செய்யவும். குறிப்பாக அந்த தண்ணீயால் மசாஜ் செய்த பிறகு குளிக்க்கூடாது.
தலைமுடியை நன்கு உலர்த்தி விட வேண்டும்.
குறிப்பு: உருளைக்கிழங்கு தண்ணீரை ப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்த கூடாது. தேவையான போது கொதிக்க வைத்து தலைக்கு தடவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்ய இரண்டே வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.