Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 12, 2018

நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு




புதுதில்லி: நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கை நீட் தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது.

நீட் தேர்வினை நடத்தும் சிபிஎஸ்இ நீட் தேர்வுக்கு வினாதாள்கள் தயாரித்ததில் சரியான மொழிபெயர்ப்பு இல்லை என்றும், குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீட் தேர்வை இனி சிபிஎஸ்இ நடத்தாது என்ற அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



குறிப்பாக 2017-18 ஆண்டில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தில் இனி நீட் தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே 2019-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை நடத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் நீட் தேர்வை இனி வரும் காலங்களில் ஆன்லைனில் எழுதுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், அதற்கான நடைமுறைகள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்று மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.