Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 24, 2018

கூகுள் நிறுவனம் அதிரடி இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் கூகுள் குரோம் {CHROME BROWSER} பயன்படுத்தும் வசதி

எந்த நெட்ஒர்க்கின் உதவியும் இல்லாமல், இன்டர்நெட் சேவை இல்லாமலேயே ஆன்ட்ராய்ட் மொபைலில் கூகுள் குரோம் {CHROME BROWSER} பயன்படுத்தும் வசதியை கூகுள் நிறுவனம் அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது.





உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், தனது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு புதிய திட்டங்களை அதிரடியாக அறிமுகம் செய்து வருகிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் கூகுள் குரோம் {CHROME BROWSER} ப்ரவ்சரை அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையிலும், உலகின் நம்பர் ஒன் ப்ரவ்சராக கூகுள் குரோம் பிரபலப்படுத்தும் வகையில் புதிய முயற்சியை அறிமுக படுத்தியுள்ளது.

அதன்படி, உங்களது ஸ்மார்ட் போன் OFFLINE மோடில் இருக்கும் போதே, கூகுள் குரோம் {CHROME BROWSER} ப்ரவ்சரை பயன்படுத்தும் வசதியை கொண்டு வந்துள்ளது. ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவோருக்கு மட்டும் இந்த வசதியை வழங்கியுள்ளது. இதன்மூலம் இண்டர்நெட் சேவை இல்லாமல் இணையதளத்தை பார்க்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.




இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளுக்கு இந்தச் சேவையை தற்போது வழங்கியுள்ளது. இந்தச் சேவையை பெற விரும்புவோர் ஆன்ட்ராய்ட் ப்ளே ஸ்டோரில் உள்ள கூகுள் க்ரோமின் சமீபத்திய பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.