Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 28, 2018

Free Laptop with Data Card - Govt Announced

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கிராம நிர்வாக அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு,'லேப்டாப்' மற்றும் 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென அறிவித்துள்ளது.தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டம் நடந்து வருகிறது. 

நேற்று, வருவாய்த்துறையின் மானியக்கோரிக்கை நடந்தது. அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கான மேம்பாட்டு பணிகள்; 'இ-சேவை' மையம் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.முக்கியமாக, கிராம நிர்வாக அலுவலர்கள் வேண்டுகோளின்படி, 'லேப்டாப்' மற்றும் 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது. 



தமிழக அரசு, இத்திட்டத்துக்கு, 1.42 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நிறைவேற்றிய அரசுக்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர்கள் கூறுகையில், 'பொது 'இ-சேவை' மையங்கள் வழியாக, மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.



ஆனால், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, 'லேப்-டாப்' முழுமையாக வழங்கவில்லை. 'லேப்-டாப்' வழங்கியவர்களுக்கு, இணைய சேவைக்கான வசதி செய்து கொடுக்கப்படவில்லை.இதனால், 'ஆன்லைன்' மூலமாக, சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது. 'டேட்டா கார்டு' வழங்கி,, மாதாந்திர செலவு தொகையும் வழங்க வேண் டுமென வலியுறுத் தினோம். அதன்படி, 'டேட்டா கார்டு' வழங்கப்படுமென அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றனர்.

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top