Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 18, 2018

TRB -விடைத்தாள் நகல்களை இன்றுமுதல் பார்வையிடலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை இன்று முதல்நேரில்பார்வையிடலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள் ளது.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறப்பாசிரியர் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்வர்களுக்கு ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்கள் தேர்வு முடிந்து தேர்வுக்கூட அறையிலேயே வழங்கப்பட்டது. இருப்பினும், மதிப்பீடு செய்யப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் நகல்களை பார்வையிட தேர்வர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே, விடைத்தாள் நகலை நேரில் பார்வையிட விரும்பும் தேர்வர்கள் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச்சாலை டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் 18-ம் தேதி முதல் (இன்று) தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு விடைத்தாள் நகலை (Scanned Image) கணினி திரையில் நேரில் பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



அந்தந்த தேர்வர்கள், தங்கள் விடைத்தாள் நகலை நேரில் வந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்படும் அனைவரின் விடைத்தாள் நகலையும் அனைவரும் பார்க்கும் வகையில் ஆன்லைனில் வெளியிட ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வாறு வெளியிட்டால்தான் வெளிப்படைத்தன்மையையும்,நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இதற்குமுன்பு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவின்போது அனைத்து தேர்வர்களின் விடைத்தாள் நகல்களும் ஆன்லைனில் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News