1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியீடு - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 28, 2018

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியீடு

சென்னை: 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, இறுதி தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு விடுமுறை காலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன் பதவியேற்ற பின்னர் சிபிஎஸ்இ-க்கு இணையான புதிய பாடத்திட்டம், தனியார் பள்ளிகளுக்கு இணையான புதிய சீருடைகள் அறிமுகம் என கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 10, 11 மற்றும் பிளஸ் டூ வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையிலும், அவர்களுடைய மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையாகவும் பொதுத் தேர்வு தேதிகள் வகுப்புகள் தொடங்கிய அன்றே அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு கால அட்டவணையும், 10-ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.



சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தேர்வு கால அட்டவணை விவரம்

1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான தேர்வு கால அட்டவணை:
* காலாண்டு தேர்வு- செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை,

* அரையாண்டு தேர்வு- டிசம்பர் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை,

* இறுதித் தேர்வு- ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை.

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான தேர்வு கால அட்டவணை:
* காலாண்டு தேர்வு- செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை,

* அரையாண்டு தேர்வு- டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை,

* இறுதித் தேர்வு- ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை (9-ம் வகுப்பு மட்டும்).



செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையில் காலாண்டு விடுமுறை காலமாகவும், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை காலமாகவும், ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை கோடை விடுமுறை காலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad