தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 3 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் இக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.
கலந்தாய்வு அட்டவணை குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையின் இணையதளங்களில் (www.tnhealth.org மற்றும் tnmedicalselection.org) விரைவில் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு? தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.12.50 லட்சமும், தனியார் பல் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.6 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு அட்டவணை குறித்த விவரங்கள் சுகாதாரத் துறையின் இணையதளங்களில் (www.tnhealth.org மற்றும் tnmedicalselection.org) விரைவில் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு? தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.12.50 லட்சமும், தனியார் பல் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.6 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.23.50 லட்சமும், பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.9 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.