Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 20, 2018

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பள்ளியிலேயே செய்து கொள்ளலாம்

பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 30ம் தேதி முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை பள்ளியிலேயே செய்து கொள்ளலாம் சிறப்பு ஏற்பாடுகள் தயார்

திருவண்ணாமலை, ஜூலை 18: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலவலகத்தில் புதிவு செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முதல் மாணவர்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். 



2017-18ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நேற்று முன்தினம் முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வித்தகுதியினை பதிவு செய்ய வரும் 30ம் தேதி முதல் 15 நாட்கள் ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கையினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்து கொள்ளலாம். மேலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை ேவலைவாய்ப்புத் துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்கள் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.



எனவே மாணவர்கள் ஏற்கனவே பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியியை பதிவு செய்து இருப்பின் அதற்கான பதிவு அடையாள அட்டையுடன் மதிப்பெண் சான்றுடன் தாங்கள் பயின்ற பள்ளிக்கு சென்று பிளஸ் 2 வகுப்பு கல்வி தகுதியினை கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம். புதியதாக பதிவு செய்ய உள்ள மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச் சான்று ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். எனவே இத்தகைய வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கல்வி தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்