Tuesday, July 17, 2018

2018 சூலை16 : CPS வல்லுந‌ர்குழுவின் உண்மை நிலை - திண்டுக்கல் எங்கெல்ஸ்

🛡 பிப்ரவரி 2016-ல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி
ஆசிரியர் கூட்டணியும் இணைந்து நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தத்தின் பலனாக அப்போதைய முதல்வர் 110 விதியின் கீழ், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வல்லுநர் குழு
அமைக்கும் அறிவிப்பை 19.02.2016ல் அறிவித்தார்.

🔥
🛡 இதனையடுத்து, 26.02.2016 அரசாணை எண்:65-ன்படி திருமதி.சாந்தசீலாநாயர் தலைமையில் வல்லுந‌ர் குழு அமைக்கப்பட்டது



🔥
🛡 அதன் பின்னர்,
28.07.2016,
14.11.2016,
02.03.2017
ஆகிய தேதிகளில் காலநீடிப்பு செய்யப்பட்ட வல்லுநர்குழுவில் இருந்து திருமதி.சாந்தசீலாநாயர் 30.03.2017-ல் விலகினார்.



🔥
🛡 இதனைத் தொடர்ந்து திரு.ஸ்ரீதர் தலைமையில் வல்லுந‌ர் குழுவை அமைத்து, 03.08.2017,
14.12.2017,
04.01.2018,
15.02.2018
ஆகிய தேதிகளில் காலநீட்டிப்பு செய்யப்பட்டது.

🔥
🛡 இவ்வாறாக இருமுறை தலைமைப் பொறுப்பையும் 7-முறை காலநீட்டிப்பையும் பெற்ற வல்லுந‌ர் குழுவின் காலம் இறுதியாக வெளியிட்ட அரசாணையின்படி 31.03.2018 அன்றே காலாவதியாகிவிட்டது.

🔥
🛡 இதனிடையே, ஜாக்டோ-ஜியோ சார்பில் செப்டம்பர் 2017-ல் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தின் போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வழக்கு விசாரணையில், 30.11.2017-ற்குள் வல்லுந‌ர் குழுவின் அறிக்கை பெற்று அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமென தமிழக அரசின் தலைமைச் செயலர் திருமதி.கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் நேரில் ஆஜராகி பதிலளித்தார்.

🔥
🛡 தற்பொழுதோ வல்லுந‌ர் குழுவின் காலம் முடிவிற்கு வந்து 100 நாட்களுக்கும் மேலான நிலையிலும், இதுவரையில் அரசிடம் அறிக்கை சமமர்ப்பிக்கப்படவில்லை என்பதும், 31.03.2018-ற்குப் பின்னர் காலநீட்டிப்பு செய்யப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது.

🔥
🛡 16.07.2016-ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் அவர்கள் தினகரன் நாளிதழுக்கு அளித்த செய்தியைத் தற்போதைய சூலை-16 செய்தியெனக் கருதி பல்வேறு சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பலர் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மற்றுமொரு செய்தியாக PAY MATRIX-உடன் ஒப்பிட்டும் மேலுமொரு செய்தியும் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. இதுவும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் பொருத்தமற்ற செய்தியே.

🔥
🛡 இவ்வாறான தவறான / காலத் தொடர்பற்ற செய்திகளைப் பரப்பி ஊழியர்கள் மத்தியில் உள்ள போராட்டக் குணத்தை முடங்கச் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதும், அதன் உண்மைத் தன்மையை விசாரியாது கல்விசார் வலைதள நிர்வாகிகள் தொடர்ந்து தமிழகம் முழுக்கப் பரப்பி வருவதும் வேதனை தரும் செயலாகவே உள்ளது. இனியேனும் இது போன்ற தகவல்களைப் பகிர்வோரும் பரப்புவோரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

🔥
🛡 CPS வல்லுந‌ர் குழு காலாவதியாகி 100 நாள்களைக் கடந்துவிட்ட சூழலில் உள்ளபடியே அறிக்கையை வெளியிட வைக்கவும், அவ்வறிக்கையில் நமக்கான உரிமைப்பறிப்பு அதிகார மட்டத்தில் நியாயப்படுத்தப்பட்டு இருப்பின் அதைத் தகர்த்து, நமக்கான ஓய்வூதிய உரிமையை முழுமையாக மீட்டெடுக்கத் தேவை வலிமையான தொடர் & கூட்டுப் போராட்டங்கள் மட்டுமே.



🔥
🛡 எனவே, CPS-ன் பாதிப்பில் உள்ள நாம் அனைவரும் நமது உரிமை வேட்கையைத் தணியவிட்டுவிடாதபடி பொந்திடை வைத்த அக்கினிக் குஞ்சுகளாகக் காத்திருப்போம்!

Popular Feed

Recent Story

Featured News