பி.எட். பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்டக் கலந்தாய்வு ஆகஸ்ட் 2 -ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை கலந்தாய்வை நடத்தும் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டுக் கல்வி நிறுவனம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 30) வெளியிட உள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,707 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.
2018-19 -ஆம் கல்வியாண்டுக்கான கலந்தாய்வு ஜூலை 18 -ஆம் தேதி தொடங்கி 24 -ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் 1,537-க்கும் அதிகமான இடங்கள் நிரம்பின.
அரசு கல்லூரிகளில் 30 இடங்களும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 140 இடங்களும் என மொத்தம் 170 பி.எட். இடங்கள் நிரம்பாமல் இருந்தன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வை ஆகஸ்ட் 2 -ஆம் தேதி தொடங்க, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,707 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.
அரசு கல்லூரிகளில் 30 இடங்களும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 140 இடங்களும் என மொத்தம் 170 பி.எட். இடங்கள் நிரம்பாமல் இருந்தன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வை ஆகஸ்ட் 2 -ஆம் தேதி தொடங்க, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு, தகுதியுள்ள மாணவர்கள், கட்-ஆஃப் விவரங்கள் ஆகியவை வரும் திங்கள்கிழமை www.ladywillingdoniase.com இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.