Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 31, 2018

உயர் கல்வி சேர்க்கையில் தமிழகத்திற்கு 2ம் இடம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம் நடத்திய, உயர் கல்வி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில், மாணவர் சேர்க்கையில், தமிழகம், தேசிய அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.





மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும், உயர் கல்வி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு நடத்தி வருகிறது. இதன்படி, 2017 - 18க்கான ஆய்வு அறிக்கையை, அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அதில், உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் விகிதத்தில், தமிழகம், 48.6 சதவீதத்துடன், தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான, சண்டிகர், 56.4 சதவீதத்துடன், முதல் இடத்தையும்; புதுடில்லி, 46.3 சதவீதத்துடன், மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.நாடு முழுவதும், மொத்தம், 39 ஆயிரத்து, 50 கல்லுாரிகள் உள்ளன. அவற்றில், தமிழகத்தில், 2,472; புதுச்சேரியில், 76 கல்லுாரிகள் உள்ளன.




தமிழகத்தில், ஒவ்வொரு கல்லுாரியிலும், சராசரியாக, 919 பேர் படிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் அதிக எண்ணிக்கையில், கல்லுாரிகள் செயல்படும் எட்டு மாநிலங்களில் ஒன்றாக, தமிழகம் உள்ளது. தமிழகத்தில், 76.2 சதவீதம், சுயநிதி தனியார் கல்லுாரிகள் செயல்படுகின்றன. உயர் கல்வியை பொறுத்தவரை, பி.ஏ., பட்டப்படிப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கலை படிப்புகளில், 36.4 சதவீதத்தினரும், இன்ஜினியரிங் படிப்பில், 14.1 சதவீதத்தினரும் சேர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top