அகில இந்திய எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வை மத்திய சுகாதார இயக்ககம் நடத்துகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. முடிவில் 12,683 இடங்கள் நிரம்பின.
முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் கைவிடப்பட்ட இடங்கள் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. கலந்தாய்வு முடிவு ஜூலை 12 -ஆம் தேதி வெளியிடப்படும். இடங்களைப் பெற்ற மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேருவதற்கு ஜூலை 22 -ஆம் தேதி கடைசியாகும்.
தமிழகத்தில் எப்போது?: இரண்டாம்கட்ட கலந்தாய்வின் முடிவில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் ஜூலை 23 -ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குள் அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி அளிக்கப்படும். தமிழகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 7 -ஆம் தேதி நிறைவுபெற்றது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
மீதமுள்ள அகில இந்திய இடங்களை மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் சமர்ப்பித்த பின்னர், தமிழகத்தில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு
இந்த மாத இறுதி வாரத்தில் தொடங்கும்; தமிழகத்தில் முதல்கட்ட எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு, காலியாக உள்ள 669 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும், இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.