Join THAMIZHKADAL WhatsApp Groups
திருக்குறள்
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
விளக்கம்:
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
பழமொழி
A bad workman blames his tools.
ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்றானாம்...
பொன்மொழி
நல்ல தலையும் நல்ல இதயமும் எப்பொழுதும் வல்லமை மிக்க சேர்க்கையாகும்.
-நெல்சன் மண்டேலா
இரண்டொழுக்க பண்பாடு
1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.
2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.
பொதுஅறிவு
1.தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் யார்?
திருH.L.தத்து
2.இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னர் யார்?
திரு .உர்ஜித் பட்டேல்
English words and. Meanings
Program--நிகழ்ச்சி
Promise--உத்தமம்
Popular---பிரபலம்
Population--மக்கள்தொகை
Problem -----பிரச்சினை
நீதிக்கதை
அப்பா என்பவன்..
அது ஒரு பள்ளியின் விளையாட்டு விழா. பெற்றோர்கள் எல்லோரும் பெரிய கூடாரத்தில் அமர்த்தப்பட்டு இருந்தார்கள். முந்தைய நாள் பெய்த மழையால் பயங்கர வெயில். ஒவ்வொரு வகுப்பாக விளையாட்டு இறுதிப்போட்டிகள் முடிவடைந்தன. அடுத்ததாக குழந்தைகளின் பிரம்மாண்ட டிரில் செயல்பாட்டிற்கு தயாராக கிளம்பினார்கள். இடைப்பட்ட நேரத்தில் பெற்றோர்களுக்கான விளையாட்டுகள் என அறிவித்தார்கள். “அப்பாக்கள் எல்லோரும் வாருங்கள் விளையாடலாம்” என அழைத்தார்கள். வழக்கம்போலவே குழந்தைகளின் நிகழ்ச்சியில் குறைவான அப்பாக்களே இருந்தார்கள். அந்த குறைவானவர்களில் பத்து பேர் தான் மைதானத்திற்கு வந்தார்கள்.
SACK RACE. கோனிப்பையில் கால்களை உள்ளே விட்டு ஓடவேண்டும். எல்லா அப்பாக்களுக்கும் கோனிப்பை கொடுக்கப்பட்டது. கடைசியாக பருமனாக ஒரு அப்பா தயங்கிபடி திறனில் மேம்பாடும். அவர் வரும்போதே தாங்கித்தாங்கி சிரமப்பட்டுத்தான் வந்தார். “சார், ஓடமுடியுமா?” என விளையாட்டு ஆசிரியியை கேட்டார்கள். சிரித்தபடி கோனியை வாங்கி காலை உள்ளே விட்டுக்கொண்டார். விசில் அடிக்கப்பட்டது. மற்ற பெற்றோர்கள் கைத்தட்ட பத்து அப்பாக்களும் ஓட ஆரம்பித்தார்கள். இல்லை பத்தாவது அப்பா ஒவ்வொரு செண்டி மீட்டராக நகர ஆரம்பித்தார். மற்ற ஒன்பது பேரில் இருவர் கீழே விழுந்து எழுந்து எல்லையை தொட்டுவிட்டார்கள். பின்னர் தான் தங்களுடன் ஓடத்துவங்கியவர் விநோதமாக நகர்ந்து வருகின்றார் என்பதனை கவனித்தார்கள். அவரை நோக்கி நடந்தார்கள். அவர் சிரித்தபடியே நகர்ந்துவந்தார். “சார், போட்டி முடிஞ்சிடுச்சு. சிரமப்படவேண்டாம்” என்றார்கள். மதுரிமாவிற்கு தகவல் சென்றது “மதுரி உன் அப்பா அங்க ரேஸ்ல கஷ்டப்பட்டு ஓட்றார்....”. அப்பாவா.. டிரிலுக்கு தயாராகிக்கொண்டிருந்தவள் திபுதிபுவென தலைதெறிக்க ஓடினாள். அப்பா.... அப்பா...உடன் ராக்கேஷ் ஓடினான்.. “ஏன் மது பதட்டப்பட்ற..” என்றான். “அப்பாவிற்கு காலில் சிக்கல் இருக்குடா. அவர் நடக்கவே சிரமப்படுவார். தேவையான அளவு மட்டும் நடங்கன்னு டாக்டர் சொல்லி இருக்கார். அவர் ஓட்றார்னு சொல்ற, கால்ல ரத்த கொட்டும்டா..” மதுரிமா மைதானத்தை அடைந்தபோது அவள் அப்பாவை எல்லோரும் சூழ்ந்து இருந்தார்கள். “அப்பா..அப்பா..” என கதறினாள். அவர் சிரித்தபடி யார் பேச்சையும் கேட்காமல் எல்லைக்கோட்டினை மெல்ல மெல்ல நகர்ந்து தொட்டார்.
தூரத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வர்ணனையாளர் மைக்கினை மதுரியின் அப்பாவிடம் கொண்டு வந்துவிட்டார். மதுரிமா சொன்ன அவர் கால் விஷயம் எல்லோருக்கும் பரவி இருந்தது. ஏன் சார் இவ்ளோ சிரமப்படுத்திக்கிட்டீங்க. ”பங்கேற்பு அவசியமும்னு இறுதிவரைக்கும் போராடனும்னு என் பொண்ணு என்னைவிட யார் சிறப்பா சொல்லிக்கொடுத்திட முடியும்”ன்னு சொல்லியதும் மைதானம் முழுக்க அமைதி. மதுரிமா அவள் அப்பாவை இறுகக்கட்டியணைத்து அழுதுகொண்டிருந்தாள். “கம்மான் பேபி” என அப்பா தேற்றினார். “அடுத்ததாக அம்மாக்களுக்கான போட்டி” என்றது கூடாரத்தில் இருந்த எல்லா அம்மாக்களும் மைதானத்திற்குள் குழுமினார்கள்.
தன் மகளை தாங்கியபடி மெதுவாக அப்பா தாங்கித்தாங்கி நடக்கின்றார். அது ஒரு சில்லோத் காட்சி. “அப்பா நான் எல்லாத்திலையும் கலந்துப்பேன்பா. லேசில விட்டுடவும் மாட்டேன்” என அப்பாவின் முதுகில் தட்டுகின்றாள்.
_A film by Vizhiyan..._
இன்றைய செய்திகள்
31.07.2018
* சாதிப் பிரச்னையால் பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்ட திருப்பூர் சத்துணவு சமையலர் பாப்பம்மாளுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டுமென்று தேசிய சிறுபான்மையினர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.
* சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்குகின்றன.
* இந்திய வீராங்கனை மந்தனா, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கியா சூப்பர் லீக் (வுமன்ஸ் கிரிக்கெட் லீக்) போட்டியில் அதிரடியாக அரை சதமெடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
* பலம் வாய்ந்த அமெரிக்காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து இந்தியா உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.